close
Choose your channels

இணைந்து செயல்பட விரும்புகிறோம். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் கடிதம்

Tuesday, September 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தையும் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கைப்பற்ற போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து நடிகர் சங்கம் விளக்கம் அளித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் உள்ளதாவது:
கடந்த சில நாட்களாக பத்திரிகை ஊடகம் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபடி உள்ளன. அதுபற்றி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த கடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது மிகப்பெரிய அமைப்பு. திரை உலகின் முதுகெலும்பு போன்ற அதனது தலைமையை தீர்மானிக்க வேண்டியது அதை சார்ந்த உறுப்பினர்கள் தான். அதில் ஓட்டுரிமை இல்லாத தென்னிந்திய நடிகர் சங்கம் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிடாது. ஆனால் அதே சமயம் எங்களது உறுப்பினராக உள்ள நடிகர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது சங்கத்தில் தயாரிப்பாளர்களாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவர்களின் நிலைப்பாடு மற்றும் ஊடக பேட்டி தேர்தல் பற்றி அவர்கள் எடுக்கும் முடிவுகளை உங்கள் உறுப்பினராக கருதியே நீங்கள் அணுக வேண்டும்.
நடிகர் சங்கத்துடன் அதை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் நீங்களும் தென்னிந்திய நடிகர் சங்கத்த தொடர்புபடுத்தி பேசுவதை தவிர்க்கும்படி உங்களது உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். தங்களின் சங்கம் சுதந்திரமாக தேர்தலை நடத்தி அதன் மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். இதுவே எங்கள் நிலைப்பாடு, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.