தென்னிந்திய நடிகர்சங்கம் அவசர செய்தி

  • IndiaGlitz, [Monday,August 22 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருதை பெற்றுள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர்களும், அரசியல்வாதிகள் உள்பட விவிஐபிகளும் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் நடிகர் சங்கம் ஒரு அவசர செய்தியாக கமலுக்கு வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:
வணக்கம் ! பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை மறைந்த நடிப்பு ஆசான் நடிகர் திலகம் டாக்டர் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கொடுத்து கௌரவித்தது. அதே போல் இன்று எங்கள் சகோதரர் உலக நாயகன் டாக்டர் திரு .கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளதை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் பாராட்டப்பட்ட திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அதே செவாலியர் விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.
செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்தது போல் , திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம். இது அவரை நேரில் சந்தித்த பிறகு முடிவாகும்.
செவாலியர் விருது கிடைத்த எங்கள் சகோதரர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் மற்றும், அனைவர் சார்பிலும் வாழ்த்துதல்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.​
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.