நடிகர் சங்க தேர்தல் வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளது

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பதால் தீர்ப்பு தேதியை விஷாலின் ‘பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிர்பார்த்து காத்திருந்தன

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளைய தீர்ப்புக்கு பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுமா? அல்லது மறுதேர்தல் நடத்தப்படுமா? என்பது தெரிய வரும்