இதுதான் நான் நடித்த முதல் பாடல் காட்சி: டீன் ஏஜ் புகைப்படத்தை வெளியிட்ட நதியா!

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

கடந்த 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் உருவான ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன் பின்னர் அவர் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பதும், தமிழ் திரையுலகில் 80களின் கனவுக்கன்னியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் ’பூவே பூச்சூடவா’ படம் தான் நதியாவுக்கு முதல் படம் என்றாலும் மலையாளத்தில் அதற்கு முன்னரே அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ‘நோக்கெத்தே தூரத்து கண்ணும் நட்டு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் தான் அவர் அறிமுகமானார் என்பதும் 1984ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் தான் முதன் முதலாக நடித்ததாகவும், அப்போது எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். டீன் ஏஜ் வயதில் நதியா இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை நதியா தற்போது தெலுங்கு ரீமேக்கில் உருவாகி வரும் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படத்தில் கீதா பிரபாகர் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீச்சல் உடை வீடியோவை போட ரொம்ப யோசிச்சேன்: டிடியின் வைரல் வீடியோ!

நீச்சல் உடையுடன் நீச்சல் குளத்தில் உள்ள வீடியோவை பதிவு செய்ய ரொம்ப யோசித்தேன் என்று பிரபல தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் 

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் 'குக் வித் கோமாளி' போட்டியாளர்கள்?

'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பது தெரிந்ததே. 'குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேகா, ரம்யா பாண்டியன் மற்றும் அறந்தாங்கி

நாளை களமிறங்கும் நட்சத்திர பேச்சாளர்கள்...! மாஸ் காட்டும் அதிமுக...!

ஏப்ரலில்  நடக்கவிருக்கும்  சட்டமன்ற தேர்தலுக்காக, நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக

37- சீட் கொடுத்தும், போட்டியிடாத சரத்...! என்ன தான் ஆச்சு சமக-வுக்கு..?

சமத்துவ மக்கள் கட்சி-யின் சார்பாக இந்த சட்டமன்ற தேர்தலில், தலைவர் சரத்குமார் போட்டியிடாதது அக்கட்சியினர்

கமல்ஹாசனுக்கு எதிராக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் கலா மாஸ்டர்! வைரல் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் முதலாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து பாஜக பிரமுகர்