இந்த வயதிலும் சின்னப்பெண் மழையில் குடை பிடித்தவாறு டான்ஸ் ஆடும் நதியா: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

நடிகை நதியா கடந்த 90களில் பிரபலமான நடிகையாக இருந்தபோது அவரது படங்களில் பெரும்பாலும் மழையில் டான்ஸ் ஆடும் நடன பாடல் ஒன்று இருக்கும் என்பதும் அந்தப் பாடல்கள் மிகப் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் குடை பிடித்தவாறு டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்றை நடிகை நதியா பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் மழை நேரத்தில் ஒரு பாடல் என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நடிகை ராதிகா சரத்குமார் உள்பட பலர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நதியாவுக்கு தற்போது 54 வயதாகியுள்ள நிலையில் இந்த வயதிலும் அவர் சின்னப்பெண் போல் மழையில் ஆடும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகை நதியா தற்போது த்ரிஷ்யம் 2’ தெலுங்கு பதிப்பில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதும் ‘பாபநாசம் 2’ படத்திலும் கமல்ஹாசன் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது