close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பாலா பட நாயகி

Monday, February 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள 'எஸ்கே 15' படத்தில் ஏற்கனவே கல்யாணி பிரியதர்ஷன், ஆக்சன் கிங் அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ள நிலையில் தற்போது நடிகை இவானா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

'எஸ்கே 15' படத்தில் இவானா இணைந்திருப்பதை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24ஏம் ஸ்டுடியோ தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. அதேபோல் இவானாவும் இந்த படத்தில் இணைந்தது குறித்து தனது மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை இவானா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு அவருடைய சிறந்த பிறந்த நாள் பரிசாக கருதப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment