நயன்தாராவால் பாரீஸ் வரை புகழ் பெற்ற யோகிபாபு

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' என்ற படத்தில் அவரை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்த முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பாரிஸ் வரை புகழ் கிடைத்துள்ளது என்ற தகவலை இன்று நடந்த 'ஜூங்கா' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி கூறினார்.

நயன்தாராவும் யோகிபாபுவும் தோன்றும் 'எனக்கு கல்யாண வயசு வந்துருச்சு' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் 'ஜூங்கா' படப்பிடிப்பிற்காக யோகிபாபு படக்குழுவினர்களுடன் பாரீஸ் சென்றிருந்தார். அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த சிலர், நயனுடன் யோகிபாபு இருக்கும் போட்டோவை குறிப்பிட்டு அந்த போட்டோவில் இருப்பவர் இவர்தானே என்று கூறி அவருடன் செல்பி எடுத்து கொண்டார்களாம்.

யோகிபாபு பக்கத்தில் தானும் சாயிஷாவும் இருந்தும் தங்களை கண்டுகொள்ளாமல் யோகிபாபுவுடன் மட்டும் அவர்கள் செல்பி எடுத்து கொண்டதாகவும், ஒருவேளை இங்கு ஸ்டிரைக் நடந்தாலும் யோகிபாபு பாரீஸ் சென்று பிழைத்து கொள்ளலாம் என்றும் விஜய்சேதுபதி நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் இன்றைய நிலையில் யோகிபாபு நடிக்காத படங்களே இல்லை என்ற அளவுக்கு முன்னணி இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜூங்கா' என்றால் என்ன? இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி கூறிய தகவல்

விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் உள்பட பலர் நடித்த 'ஜூங்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

பிக்பாஸ் வீட்டில் கன்பர்ம் ஆன விஜய் பட நடிகை

டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த நாயகிகளில் ஒருவரும், விஜய் நடித்த குஷி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மும்தாஜ்,

72 வயது டைப்பிஸ்ட் பெண்ணை ஒரே நாளில் பிரபலப்படுத்திய சேவாக்

சேஷோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் டைப்பிஸ்ட் ஆக பணிபுரியும் 72 வயது பெண் ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பதிவு செய்த ஒரே ஒரு டுவீட்டால் பிரபலம் ஆகிவிட்டார்

புதிய தலைமுறை விவாதத்தில் அமீர் பேசியது என்ன?

கோவையில் புதிய தலைமுறை ஏற்பாடு செய்த வட்டமேஜை விவாத நிகழ்ச்சியில் தமிழிசை செளந்திரராஜன், இயக்குனர் அமீர், தனியரசு எம்.எல்.ஏ, ஞானதேசிகன், செம்மலை, டி.கே.எஸ் இளங்கோவன், உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர்.

'காலா' ரஜினி பாணியில் பிரதமர் மோடி: வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களையும்