அடுத்த பட டைட்டில் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக் ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த படம் ஒரு அரசியல் படம் என்றும், இந்த படத்தின் டைட்டில் 'நாற்காலி' என்றும் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். 'நாற்காலி' என்பது எனது அடுத்த படத்தின் டைட்டில் இல்லை என்றும், இதுகுறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்' என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக பரவி வந்த இந்த பிரச்சனைக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும், தனது அடுத்த படத்தின் டைட்டிலை அவர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிகிறது.

 

More News

4வது முறையாக ரஜினி படம் செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் அபாரமாக இருந்து வருவதால் விநியோகிஸ்தர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

உலக வங்கி தலைவர் ஆகிறாரா சென்னை பெண்

உலக வங்கியின் தலைவராக இருந்து ஜிம் யாங் கிம் என்பவர் இம்மாத இறுதியில் பதவி விலக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கட்-அவுட், பேனர் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை: சிம்பு

கோலிவுட் திரையுலகில் பெரிய நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகும்போது கட் அவுட், பேனர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது என்பது ரசிகர்களால்

28 நாளில் 18 ரிலீஸ்: பிப்ரவரியில் வரிசை கட்டும் படங்கள்

இம்மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது.

உலகின் பெஸ்ட் ஃபினிஷர்களில் ஒருவர்: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய பிரபல வீரர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கொடுத்த 299 என்ற இமாலய இலக்கை இந்திய அணி 49.2 ஓவர்களில் எட்டி வெற்றிக்கனியை பறித்தது