'நானும் ரெளடிதான்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,September 19 2015]

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் பாராட்டை பெற்றுள்ளது. பேய்ப்படங்களிலேயே மிகவும் வித்தியாசமாக, அதே நேரத்தில் ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாத இந்த படம் முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட் மற்றும் நயன்தாராவுக்காக வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா நடித்த அடுத்த படமான 'நானும் ரெளடிதான்' படமும் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இளையதளபதி விஜய்யின் 'புலி'யுடன் இந்த படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 'தங்கமே' என்று தொடங்கும் இந்த பாடல் அனிருத்தின் முந்தைய பாடல்களை போல் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.