நானி-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாஸ் திரைப்படம்:  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Tuesday,March 22 2022]

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது செய்து வருகிறார். அந்த வகையில் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித்துணுக்கு சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் நடிகர் நானி லுங்கியுடன் கரடுமுரடான தோற்றத்தில் தோன்றியுள்ளார். அவரது இந்த தோற்றம் பெரும் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.

முன்னோட்ட காட்சி துணுக்கில், நடிகர் நானி தனது கூட்டத்துடன் சிங்கரேணி சுரங்க பகுதியில் நடந்து வருகிறார். அவரது வித்தியாசமான முரட்டு தோற்றம் நம்மை மிரட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் சந்தோஷ் நாராயணனின் பின்ணனி இசை இக்காட்சிக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதையில், நானி மாஸ் மற்றும் ஆக்சன் கலந்த அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு அழுத்தமான டிராமா திரைப்படமாக உருவாகும் ‘தசரா’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி துணுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், நவின் நூலி படத்தொகுப்பும் செய்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

More News

சேரன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் வெற்றிப்பட இயக்குனராக இருந்தவர் சேரன் என்பதும் தொடர்ச்சியாக அவர் கொடுத்த வெற்றிப்படங்கள் கோலிவுட் திரையுலகில் வசூலை அள்ளியது

'பீஸ்ட்' சென்சார், ரன்னிங் டைம் தகவல் வெளியாகிவிட்டதா?

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

முதல்முறையாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம்? இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என முன்னணி நட்சத்திரங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வரும் நிலையில்

அஜித், விஜய் ரகசிய சந்திப்பு நடந்ததா? 

அஜித், விஜய் ஆகிய இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் அவ்வப்போது