வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வனை அடுத்து இன்னொரு பிரமாண்ட விழா: கலைப்புலி எஸ் தாணு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும், இந்த விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களை அடுத்து தனுஷ் நடித்த ’நானே வருவேன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு அவர்கள் கூறியபோது, ‘விரைவில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் எல்லா பாடல்களையும் உங்களுக்கு திரையில் காண்பித்து டிரைலரையும் காண்பித்து உங்களை மகிழ்விப்பேன். அகிலம் வாழக்கூடிய அத்தனை மக்களுக்கும், திரையுலகை நேசிக்கும் அத்தனை பேர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு நல்ல விழாவாக ’நானே வருவேன்’ டிரைலர் விழா இருக்கும் என்று கூறியுள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் இந்த பேச்சால், ‘வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ டிரைலர் விழாவுக்கு இணையாக ‘நானே வருவேன்’ டிரைலர் விழாவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#NaaneVaruven Grand Trailer & Audio Launch On Plans????#Dhanush | #Yuvan | #Selvaraghavanpic.twitter.com/vk5cm71spj
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments