close
Choose your channels

கமல் விமானத்தில் பறக்கலாம், எல்லாம் பிக்பாஸில் வந்த பணம்: சீமான்

Monday, March 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல் தாராளமாக விமானத்தில் பறக்கலாம் அவருக்கு பிக்பாஸில் வந்த பணம் இருக்கிறது ஆனால் என்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை என்று திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து அந்த தொகுதியில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ‘காஞ்சிபுரம் கோவை என மாவட்டங்களுக்கு விமானத்தில் சென்று பறந்து வருகிறார் கமல், ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லையே? என்ற கேட்ட கேள்விக்கு சீமான் தனது பாணியில் பதிலளித்தார்.

சீமான் கூறியபோது, ‘என்னிடம் உண்மையிலேயே பணம் இல்லை. கமல் வெகுநாட்கள் நடித்திருக்கிறார். பிக்பாஸில் வந்த பணமே அவர் விமானத்தில் பறக்கப் போதுமானது. இன்னும் சொல்ல போனால் சொந்தமாக அவர் விமானம் கூட வாங்கி பறக்கலாம். அந்த அளவுக்கு அவர் வசதியாக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் குறித்து சீமான் கூறிய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment