தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவேன்: நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு!

  • IndiaGlitz, [Sunday,August 14 2022]

தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றி நடித்த ‘ஜீவி 2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்ப் சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாக்யராஜ், தம்பி ராமையா, சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

இதில் தம்பி ராமையா பேசும்போது, ‘பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இடைவெளி இருக்கும். ஆனால் ’ ஜீவி’ படக்குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டதால் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ இருக்கும் என்று நம்பலாம். இந்த படம் உயரத்தைத் தொடும் என்று சொல்ல முடியாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு துயரத்தை கொடுக்காது’ என்று கூறினார்

மேலும் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ’ராஜா கிளி’ என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் அதனால் இனி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தம்பி ராமையா கூறினார். இதனை அடுத்து பேச வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தம்பி ராமையா படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது என்றும் அப்படி குறைத்துக் கொண்டால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம் என்றும் அன்புடன் எச்சரிக்கை விடுத்தார்’.

More News

தளபதி விஜய்யின் 'வாரிசு': படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகவும்

3 மடங்கு லாபம் கொடுத்த சூப்பர்ஹிட் படம்: ஷங்கருக்கு நன்றி சொன்ன சரத்குமார்!

 சரத்குமார் நடித்த சூப்பர்ஹிட் படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அந்த படத்தின் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ள நடிகர் சரத்குமார், இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர்களுக்கு

பிரிட்டிஷ் மகாராணி முன் பேசிய வசனம்: சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறிய கமல்!

 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் பிரிட்டிஷ் ராணியின் முன் சுதந்திரம் குறித்து பேசிய வசனத்தை

30 ஆண்டுகள் செய்தி வாசித்த பிரபலம் காலமானார்: பொதுமக்கள் இரங்கல்

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசுவாமி காலமானார். அவருக்கு வயது 87.

'என்ன கொடுமை இது': நயன்தாரா கெட்டப் போட்ட பிக்பாஸ் நடிகை குறித்து விக்னேஷ் சிவன் கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கெட்டப்பில் இருக்கும் பிக்பாஸ் நடிகையின் புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த கமெண்ட்ஸ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.