விஜய் அரசியல் கட்சியில் 'திராவிடம்' இல்லாதது பெரிய மாறுதல்: பிரபல அரசியல் தலைவர்..!

  • IndiaGlitz, [Friday,February 02 2024]

நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என்பதும் தமிழக வெற்றி கழகம் என்ற அவரது கட்சியின் பெயர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய் தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்த ஒரு சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான பதிவுகள் இதுகுறித்து பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில் விஜய் அரசியல் வருகை அரசியல் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜய் அரசியல் கட்சி குறித்து கருத்து தெரிவித்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து கூறிய போது ’தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயர் நன்றாக இருக்கிறது, வரவேற்கிறேன். கட்சியின் பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல்தான். அவருக்கான வாக்குகள் அவருக்கு, எனக்கான வாக்குகள் எனக்கு என்று பேட்டி அளித்துள்ளார்.

More News

அரசியல் பெருங்கடலில் விஜய் மூழ்குவாரா? கரை சேருவாரா? முன்னாள் அதிமுக அமைச்சர் கருத்து..!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  சில நிமிடங்களுக்கு முன் அவர் தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அரசியல் என்பது தொழில் அல்ல, புனிதமான பணி.. கட்சி பெயரை அறிவித்தார் விஜய்..!

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி விரைவில் தொடங்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

32 வயதில் காலமானார் நடிகை பூனம் பாண்டே.. என்ன நடந்தது?

பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 32.  

'சிம்பு 48' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்..!

சிம்புவின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 48வது படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் இன்று வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசனின்

'சிறகடிக்க ஆசை': மலேசிய மாமாவை அடுத்து அடுத்த இடி.. முத்து கண்டுபிடித்த உண்மையால் ரோகிணி அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறக்கடிக்க ஆசை' என்ற சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அண்ணாமலை தனது மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களுடன்