விஜய்சேதுபதி படத்திற்கு சீமான் கட்சியினர் திடீர் எதிர்ப்பு: இதுதான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே, இந்த நிலையில் இந்த படத்தின் டீசருக்கு நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரசியல் சம்பந்தப்பட்ட படமான இந்த படத்தின் டீசரில் பார்த்திபன் கேரக்டர் அரசியல்வாதி என்பது தெரிந்ததே. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள பார்த்திபன் கேரக்டரின் போஸ்டரில் ’புலி இருக்கும் வரை உங்கள் நினைவுகள் இருக்கும்’ என்ற வாசகங்கள் உள்ளது. மேலும் பார்த்திபன் கேரக்டரின் பெயர் ’ராசிமான்’ என்றும் அந்த போஸ்டரில் உள்ள நிறங்கள் சிவப்பு மஞ்சள் சிவப்பு என்று இருப்பதும் நாம் தமிழர் கட்சியையும் அக்கட்சியின் தலைவர் சீமானை குறிப்பதாகவும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து இந்த படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கும் இயக்குனருக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமான போது முதன் முதலாக எதிர்த்துக் குரல் கொடுத்தவர் சீமான் என்பதால் அவரை பழி வாங்குவதற்காகவே விஜய்சேதுபதி வேண்டுமென்றே சீமான் மாதிரியான கேரக்டரை உருவாக்கி அவமதிப்பதாக அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு படக்குழுவினர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout