பெரும் அரசியல் தலைகளை பின்னுக்கு தள்ளிய 'நாம் தமிழர்' காளியம்மாள்....! இது புதுசா இருக்குப்பா...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக சட்டப்பேரவை முடிந்தநிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் முடிவை எதிர்ப்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
தேர்தலின்போது, தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் வேட்புமனுவுடன், தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தை இணையத்தளத்தில் வெளியிடும். இந்த பிராமணப்பத்திரம் மற்றும் வேட்புமனுவை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். ஒவ்வொரு முறை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யும்போது இணையதளத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் பிரமாணப்பத்திரத்தை 3,343 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிச்சாமியின் பிரமாணப்பத்திரத்தை 10513 நபர்களும், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலினின் பிரமாணப்பத்திரத்தை 10573 நபர்களும் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவின் பிரமாணப்பத்திரத்தை, மூன்று லட்சத்து இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர். இது புது சாதனையாக பேசப்பட்ட நிலையில், வேட்பாளரே இச்செய்தியை கேட்டு ஆச்சரியப்பட்டார்.
அந்தவகையில் பத்மபிரியாவையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள். பூம்புகார் தொகுதியில் களமிறங்கியிருக்கும் இவரின் பிராமணப்பத்திரத்தை 7 லட்சத்து 59 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பெரும் அரசியல் தலைகளை விட இந்த விஷயத்தில் காளியம்மாள் முன்னுக்கு இருப்பதால், இச்செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
காளியம்மாள் பற்றி,,
நாகப்பட்டினத்தை சேர்ந்த காளியம்மாள் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது 60,515 வாக்குகள் பெற்ற இவரின், இவரின் பிரமாணப்பத்திரத்தை வெறும் 66 முறை மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை ஏழரை லட்சத்தை கடந்துள்ளதால் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரமாணப்பத்திரத்தில்வேட்பாளர்களின் கல்வித் தகுதி, வருமானம், கடன் தொகை, சொத்து விபரங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com