கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி! நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொஞ்சமாவது நன்றியோடு இருங்கள் என விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் பிரமுகர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான சமந்தா நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற தொடருக்கு நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தது என்பதும், இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தன என்றும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் அமேசான் ஓடிடியில் திட்டமிட்டபடி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தி ஃபேமிலிமேன் 2’ இயக்குனர்களின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இது ’தி ஃபேமிலிமேன் 3’ கிடையாது என்றும் வேறு கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ’தி ஃபேமிலிமேன்’ இயக்குனர்களுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் வெளியானதையடுத்து இந்த புகைப்படத்தை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
’தி ஃபேமிலிமேன்’தொடர் மூலம் புலிகளை கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களை காயப்படுத்திய அயோக்கியர்களுடன் கொஞ்சி குலவ எப்படி உங்களால் முடிகிறது விஜய் சேதுபதி? வெட்கமின்றி மக்கள் செல்வன் என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியோடு இருங்கள் விஜய் சேதுபதி’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். யாருடைய திரைப்படத்தில் நடிக்க வேண்டும், நடிக்க வேண்டாம் என்பதை முடிவு செய்ய விஜய் சேதுபதிக்கு முழு உரிமை உள்ளது என்றும் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளர் முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமான போது இதே நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் இதனை அடுத்து அந்த படம் டிராப் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments