தமிழ் திரைப்பட இசையமைப்பாளரின் திருமண தேதி அறிவிப்பு
Saturday, July 22, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கிய 'பாரிஜாதம்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண்குமார். இவர் பாக்யராஜின் மகள் சரண்யாவுடன் கல்லூரியில் படித்தவர் என்பதும், சரண்யாவின் பரிந்துரையின் பேரில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரிஜாதம்' படத்திற்கு பின்னர் 'யாரடி நீ மோகினி மோகினி', லாடம், 'போடா போடி', 'சமர்' மற்றும் 'மணல் கயிறு 2' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் தரண்குமாரின் திருமண தேதி செப்டம்பர் 15 என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாடல் அழகி தீக்ஷிதா மாணிக்கம் என்பவர் தான் மணப்பெண். செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பதியில் திருமணமும், அதற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் வரவேற்பும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தரண் அறிவித்துள்ளார். மணவாழ்க்கையில் நுழையும் இசையமைப்பாளர் தரணுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments