close
Choose your channels

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'விக்ரம் வேதா' உள்பட இந்த வார ஓடிடி திரைப்படங்கள்: முழு லிஸ்ட்

Friday, January 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் சுமார் நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியிலும் ஏராளமான படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகிறது என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் வடிவேலு நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட 2 தமிழ் படங்களும் மற்ற மொழிப் படங்களும் வெளியாக உள்ளன. அது குறித்து தற்போது பார்ப்போம்.

வடிவேலு நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாக உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓடிடியில் குடும்ப ஆடியன்ஸ்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சோனி லைவ் போட்டியில் ’ஸ்டோரி ஆப் கிங்ஸ்’ என்ற தமிழ் ஆந்தாலஜி படம் வெளியாக உள்ளது. கெளதமி, பரத் நிவாஸ்,அதிதி பாலன், ரித்விகா உள்பட பலர் நடித்த இந்த ஆந்தாலஜி திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் ’ஹிட் 2’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், 3Cs என்ற தெலுங்கு திரைப்படம் சோனி லைவ் ஓடிடியிலும் வெளியாக உள்ளது. தமிழில் சூப்பர்ஹிட்டான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் வூட் என்ற ஓடிடியில் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ’செளதி வெள்ளக்கா’, ’ஷெபிகிண்டெ சந்தோஷம்’ ஆகிய மலையாள படங்களும், ‘தி மெனு’ என்ற ஆங்கில படமும், ஊஞ்சாய் என்ற இந்தி திரைப்படமும் இந்த வார ஓடிடி படங்கள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment