'நாச்சியார்' படத்தின் மூன்று நாள் அசர வைக்கும் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்,  நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நாச்சியார்' திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றது என்பதை காலையில் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் இந்த படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வாரயிறுதி நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து ஆச்சரியம் அளித்தது

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்று நாள் தமிழக வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.5.5 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.1.02 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.1.57 கோடியும், கோவையில் ரூ.1.1 கோடியும், சேலத்தில் ரூ.26 லட்சமும், நெல்லை-குமரி பகுதியில் ரூ.21 லட்சமும் வசூல் செய்துள்ளது.

இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இன்றும் பெருவாரியான திரையரங்குகளில் திருப்தி தரும் வசூலை இந்த படம் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன,.