'சென்னையில் ஓர் நாள்' படம் போல் ஒரு நிஜ சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'சென்னையில் ஓர் நாள்' படத்தில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிட்டது போல் கோவையில் நேற்று ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது.
கோவையை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஜெயபிரகாஷ் என்பவரின் ஒருவயது குழந்தை விசைத்தறி இயங்கி கொண்டிருக்கும்போது திடீரென அதில் கையை வைத்துவிட்டது. இதனால் குழந்தையின் நான்கு விரல்கள் துண்டாகியது.
இதனை தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் ஆம்புலன்ஸை வரவழைத்தார். ஆனால் அந்த நேரத்தில் டிராபிக் அதிகமாக இருந்ததால் குறித்த நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல முடியுமா? என்ற நிலை இருந்தது. இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் உடனடியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினார். இது ஒரு குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்ட கமிஷனர் உடனடியாக அவிநாசி சாலையிலுள்ள சிட்ரா முதல் சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை வரை சாலையெங்கிலும் உள்ள 12 சிக்னல்களையும், ஒரே நேரத்தில் ரெட் சிக்னல் போட்டு போக்குவரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
இதனால் ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது. மேலும் துண்டுபட்ட விரல்களை ஐஸ்பெட்டியில் பாதுகாத்து கொண்டு செல்லப்பட்டதால் குழந்தைக்கு சரியான சிகிச்சையும் கிடைத்தது. இக்கட்டான நேரத்திலும் பதட்டமடையாமல் புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவருக்கும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய போலீஸ் கமிஷனருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout