'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு முடிந்து விட்டதா? 'புஷ்பா 2' விழாவில் கிடைத்த ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதே நிறுவனம் தான், அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’படத்தையும் தயாரிக்கிறது.
இந்த நிலையில், நேற்று ‘புஷ்பா 2’ புரமோஷன் விழா சென்னையில் நடந்த போது, ’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் தெரிவித்தது அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடந்த ’புஷ்பா 2’விழாவில் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நவீன் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. திட்டமிட்டபடி, நாங்கள் படப்பிடிப்பை முடித்து விடுவோம். ஏற்கனவே இரண்டு முறை பொங்கல் ரிலீஸ் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ள நிலையில், சரியான ரிலீஸ் தேதியை இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’.
’நாங்கள் தமிழில் நேரடியாக தயாரிக்கும் முதல் படம் இதுதான் என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எங்களிடம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது என்பது தயாரிப்பாளரால் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொங்கல் தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[BREAKING] 🚨
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 24, 2024
The Most Awaited #GoodBadUgly Movie Release Date Announcement Is Coming Soon 😎🧨
Confirmed By The Producer ✨#AjithKumar pic.twitter.com/BTYwze5r4a
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments