அஜித்தின் 32 வருட சினிமா.. வாழ்த்துக்களுடன் பொங்கல் ரிலீஸை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Saturday,August 03 2024]

அஜித் திரையுலகிற்கு வந்து 32 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் ’விடாமுயற்சி’ படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’குட்நைட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இந்த படத்தின் புதிய ஸ்டில் வெளியிட்டு அஜித்தின் 32 வருட சினிமா வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

எனவே ஒரே நாளில் ’விடாமுயற்சி மற்றும் ’குட்நைட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களின் புதிய ஸ்டில் வெளியானதை அடுத்து அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மேலும் இன்று வெளியான போஸ்டரில் ’குட்நைட் அக்லி’ படம் பொங்கல் ரிலீஸ் என்பது மீண்டும் பட குழுவினர் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அஜித்தின் சம்பவம் பொங்கல் தினத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான ஸ்டைலில் அஜித் இருக்கும் இந்த ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ’குட்நைட் அக்லி’ படம் உருவாகி வருகிறது.