பெற்றதாயின் கனவு… 56 ஆயிரம் கி.மீ ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற தலைமகன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,September 17 2020]

 

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது தாயை அழைத்துக் கொண்டு 56 ஆயிரம் கி.மீ பயணத்தை ஸ்கூட்டரிலேயே மேற்கொண்டு இருக்கிறார். இவரது தந்தை இறந்து 4 ஆண்டுகள் கடந்து விட்டதாம். இதனால் தனிமையாக உணருவதாகக் கூறிய தனது தாய் ரத்னம்மாளை, மகன் கிருஷ்ணமூர்த்தி ஸ்கூட்டரிலேயே ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலில் ரத்னம்மா தனது மகனிடம் பக்கத்து மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதோடு நான் இதுவரை வேறு வெளி மாநிலங்களுக்குச் சென்றதே இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார். அட இவ்வளவு தானே என முடிவெடுத்த கிருஷ்ணமூர்த்தி தனது தந்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய பழைய ஸ்கூட்டரை தயார் செய்திருக்கிறார். முதலில் ஹசான் மாவட்டத்தில் உள்ள பேளூர் அடுத்த ஓலேபீடு கோவிலுக்கு தனது தாயை அழைத்து சென்றிருக்கிறார்.

அடுத்து ஆந்திரா, மராட்டியம், கோவா, புதுச்சேரி, தமிழ்நாடு, சத்தீஷ்கர் என்று பல மாநிலங்களில் உள்ள கோவில், சர்ச் என அனைத்து ஆன்மீகத் தலங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த 2018 ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயணம் 2 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் நீடித்து இருக்கிறது. அதாவது இந்தப் பயணத்திற்கு 33 மாதங்கள் ஆனதாம். 70 வயதான ரத்னம்மாளும் வயதைப் பொருட்படுத்தாமல் மகனும் உற்சாகமாக ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

56 ஆயிரம் கி.மீ ஆன்மீக பயணம் செய்த தாயும் மகனும் சமீபத்தில் மைசூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்திருக்கின்றனர். இவர்களை உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தனது பெரும் கனவை நிறைவேற்றிய மகனை குறித்து தாய் ரத்னம்மா தற்போது பூரிப்புடன் இருக்கிறார். மகனும் எனது தாய்க்கு மிஞ்சியது எதுவுமில்லை. இறுதிவரை இப்படியே சந்தோஷத்துடன் வைத்திருக்க ஆசைப்படுகிறேன் எனக் கூறியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனராகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உதவியாளர்: ஹீரோ யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' மற்றும் தனுஷ் நடித்த 'விஐபி 2' ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பது தெரிந்ததே.

தமிழக அரசுக்கு சூர்யாவின் நெஞ்சார்ந்த பாராட்டு: பரபரப்பு தகவல் 

நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

விஜய் பட இயக்குனர் உடல்நலக்குறைவால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

தளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான 'வேட்டைக்காரன்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

ராகவா லாரன்ஸ், விஷாலை அடுத்து தீபாவளி ரிலீஸில் இணையும் சிவகார்த்திகேயன்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

சிகரம்‌ தொட்ட சாதனையாளர், சாதிக்கத்‌ துடிக்கும்‌ இளமை‌யின் 'எவனென்று நினைத்தாய்': ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எவனென்று நினைத்தாய்' குறித்த படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியானது என்பதை பார்த்தோம்.