சபிக்கப்பட்ட கிராமம்… பிறந்த பெண்கள் அனைவரும் ஆண்களாக மாறும் விசித்திரம்!!!
- IndiaGlitz, [Monday,December 14 2020]
விஞ்ஞானிகள் கூட உலக வரைப்படத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை சபிக்கப்பட்ட கிராமமாகவே கருதுகின்றனர். காரணம் இந்த கிராமத்தில் உள்ள சிறுமிகள் அனைவரும் 12 வயதை எட்டியவுடன் ஆண்களாக மாறிவிடுகின்றனர். டொமினிக் குடியரசில் உள்ள லாசாலினாஸ் எனும் கிராமத்தில் தான் இந்த விசித்திர சம்பவம் நடைபெறுகிறது.
இந்தக் கிராமத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் அனைவரும் 12 வயது வரை சாதாரண பெண்களாகவே இருக்கின்றனர். 12 வயதை எட்டியவுடன் உறுப்புகள் அனைத்தும் ஆண்களின் உறுப்புகளாக மாறுகிறது. அதேபோல குரல் வளமும் ஆண்களின் குரல் போல மாறுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் பெண்களின் எண்ணிக்கையே குறைந்து போகிறது. இந்த விசித்திர சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இந்த கிராமத்தின் எல்லையை மிதிக்க பயன்படுகின்றனர்.
இந்நிலையில் சிறுமிகளிடம் ஏற்படும் பாலின மாறுபாட்டிற்கான காரணத்தை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை முழுமையான காரணம் எதுவும் கண்டறிய முடியவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆடோஹேர்மாஃப்ரானைட் எனப்படும் இந்த விசித்திர வியாதியை உள்ளூரில் க்வெடோசே என அழைக்கின்றனர். அதாவது திருநங்கைகள் எனும் பெயரால் இந்த விசித்திர நோயை குறிப்பிடுகின்றனர்.
மரபணு காரணங்களால் இந்த நோய் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தாலும் ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இது நிகழ்வதால் விஞ்ஞானிகளின் மத்தியிலும் இந்நோய் மர்மமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் 6,000 ஆக இருக்கும் லாசாலினாஸில் கிராமத்தின் ஒவ்வொரு 90 பெண் குழந்தைகளிலும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே இந்த மர்மநோயால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற பாலின மாறுபாட்டால் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு கண்பார்வை குறைபாடும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமெத்த கிராமத்திலும் உள்ள பெண்கள் அனைவரும் ஆண்களாக மாறிவிட்டால் எப்படி இருக்கும். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இது நன்றாக இருந்தாலும் மனித மரபணுவில் ஏற்பட்டு வரும் பெரும் அளவிலான மாற்றத்தை இது எடுத்துக் காட்டுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.