ஸ்டிராங் ரூம் உண்மையிலேயே ஸ்டிராங் ரூமாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன் 

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் அன்றைய தினம் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் அருகே மர்மமான கண்டெய்னர்கள் இருப்பதாகவும் இயந்திரங்களை ஹேக் செய்ய லேப்டாப்புடன் சிலர் நடமாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

இது குறித்து கமல்ஹாசன் கூறுகையில் வாக்கு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் ஸ்ட்ராங் ரூம் உண்மையிலேயே ஸ்ட்ராங் ரூம் ஆக இருக்க வேண்டும் என்றும், அதன் அருகே மர்மமான முறையில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்பதும் லேப்டாப்புடன் மர்ம நபர்கள் சிலர் நடமாட்டம் உள்ளது என கூறப்படுவது பெரும் கவலையை அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென கண்டெய்னர் லாரிகள் வருவது ஏன் என்ற கேள்வியும் கமலஹாசன் எழுப்பியுள்ளார். கமல்ஹாசனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது