வீட்டிற்குத் தானாகத் தேடிவரும் மர்ம பார்சல்: தலையைப் பிய்த்துக்கொள்ளும் வல்லரசு நாடுகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான மர்ம விதைகள் பார்சலில் அனுப்பப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பை கிளம்பியிருக்கின்றன. அந்த பார்சல்களின் அடையாளம் காணமுடியாத வித்தியாசமான விதைகள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விதைகள் மண்ணின் வளத்தை அழிக்கும் வகையிலான உயிரி தொழில்நுட்பமாக இருக்குமோ என்ற அச்சத்தையும் தற்போது அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதேபோன்று தற்போது கனடாவின் சில பண்ணை விவசாயிகளுக்கும் விதைகள் கிடைக்கப் பெற்றிருப்பதால் மேலும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. அதேபோல பிரிட்டனிலும் சிலருக்கு இந்த விதைகள் கிடைக்கப் பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் உலகம் முழுவதும் மர்ம பார்சல் எங்கிருந்து வருகிறது? இந்த விதைகள் என்ன என்பதைக் குறித்து விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. சீனாதான் இந்த மர்ம விதைகளை அமெரிக்க மக்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்ற உறுதியான குற்றச்சாட்டையும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை தற்போது வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறது. ஆனால் சீனா தரப்பில் இதற்கு கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருப்பதோடு விதைகளை அனுப்புவதற்கு எங்கள் நாட்டு சட்டம் அனுமதிக்காது, அந்த விதைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் நாங்கள் விசாரித்து தகவல் கொடுக்கிறோம் என்று பதில் அளித்திருக்கிறது சீனா.
இதனால் அமெரிக்கா உளவுத்துறை தீவிரமான விசாரணையில் தற்போது இறங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் யாரும் பார்சலில் வரும் விதைகளைப் பிரித்து நிலத்தில் நடவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. அலபாமா, கொலராடோ, ஃப்ளோரிடா, லோவா, கன்சாஸ், டெக்சாஸ் உள்ளிட்ட 28 மாகாணங்களில் உள்ள பெரும்பலானவர்களுக்கு இந்த விதைகள் அனுப்பப் பட்டு இருப்பதால் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் தற்போது பரபரப்பு அதிகமாகி இருக்கிறது. கொரோனா பரவல் ஒருபக்கம் அமெரிக்காவை படுத்திக் கொண்டிருக்கும்போது பார்சலில் வரும் மர்ம விதைகளைக் குறித்தும் மக்கள் பீதியடைந்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் சேர்ந்து விரிவான விசாரணையையும் தொடங்கியிருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments