ஒமைக்ரான் பீதிக்கு இடையே தென்ஆப்பிரிக்காவில் மர்மநோய் பாதிப்பு…  WHO கவலை!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

கொரோனா வைரஸின் புதிய உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முதன்முதலில் தென்ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து பல உலக நாடுகளில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து WHO கடும் அச்சத்தை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் மேலும் ஒரு புதிய மர்மநோய் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழந்துவிட்டதாக WHO கவலை தெரிவித்து உள்ளது. தெற்கு சூடான் நாட்டில் உள்ள ஜோங்லே மாகாணத்தில் பங்காக் எனும் நகரத்தில்தான் கடந்த சில தினங்களாக மர்மநோய் ஒன்று பரவிவருகிறது. இந்த நோயால் இதுவரை 89 பேர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த நோயின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தீவிரம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் வெள்ளப்பாதிப்பு அதிகம் உள்ள பங்காக் பகுதியில் மக்களுக்கு மர்மநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் புதிய நோயின் தீவிரம் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்ய WHO விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது