சீனாவில் இருந்து பார்சலில் வந்த மர்ம விதைகள்: அதிர்ச்சியில் அமெரிக்கா!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் இருந்துதான் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் சீனா மட்டும் கொரோனாவில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறாஇ சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க பொதுமக்களுக்கு அமெரிக்காவின் விவசாயத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என்றும் அந்த விதைகள் மற்றும் அதன் பேக்கேஜ்களை பத்திரமாக வைத்திருந்து உள்ளூரில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பயாலஜிக்கல் போரைத் தொடங்கி உள்ளதாக சீனா மீது குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கும் மர்மமான விதைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை நேரடியாக வீழ்த்த முடியாத சீனா இதுபோன்ற பயாலஜிக்கல் போரைத் தொடங்கி உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com