close
Choose your channels

'பிசாசு 2' ரிலீசுக்கு முன்பே இன்னொரு படத்தை முடித்த மிஷ்கின்: ரிலீஸ் எப்போது?

Saturday, June 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’பிசாசு 2’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவான இன்னொரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ட்ரெயின்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழுக்க முழுக்க ரயிலில் நடைபெறும் கதையம்சம் கொண்ட ‘ட்ரெயின்’ திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான ரயில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

விஜய்சேதுபதியுடன் நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிரித்விராஜ், கே.எஸ்.ரவிகுமார், யூகிசேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, சிங்கம்புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment