மிஷ்கின் படங்களுக்கு இசையமைப்பது சவாலான விஷயம். அரோல் கரோலி

  • IndiaGlitz, [Wednesday,October 26 2016]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான அரோல் கரோலி மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஒரே ஒரு பாடலை மட்டுமே கம்போஸ் செய்திருந்தாலும் பின்னணி இசைக்காகவே பெரிதாக பேசப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அரோல் கரோலி மிஷ்கினின் அடுத்தபடமான 'சவரக்கத்தி' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக அரோல் கரோலி இரண்டு பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாகவும், இவற்றில் தமிழச்சி பாண்டியன் எழுதிய 'அண்ணாந்து பார்' என்று தொடங்கும் பாடலின் காட்சிகள் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் என்றும் இந்த பாடலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு புதுவித அனுபவத்தை தரும் என்றும் அரோல் கரோலி கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு பாடல்' தங்கக்கத்தி இரும்புக்கத்தி' என்று தொடங்கும் பாடலாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இயக்குனர் மிஷ்கினுக்கு இசையமைப்பது சவாலான விஷயம் என்றாலும் அவரின் தேவை என்ன என்பதை தன்னாள் உணர்ந்து கொள்ள முடிந்ததால் இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாக அவர் கூறினார்,.
அரோல் கரோலி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.