இரண்டு திரையுலக மேதைகளின் படத்தில் சாந்தனு
- IndiaGlitz, [Wednesday,March 14 2018]
இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவர் இயக்குனர் கே.பாக்யராஜ். ஆனால் அவருடைய மகன் சாந்தனுவுக்கு இன்னும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப்படம் கூட அமையவில்லை. ஒரே ஒரு வெற்றிக்காக அவர் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் கோலிவுட்டின் இரண்டு திரையுலக மேதைகளுடன் இணையவுள்ளார்.
ஆம் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் படத்தில் சாந்தனு நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த தகவலை சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் மிஷ்கின், பி.சி.ஸ்ரீராமுடன் உள்ள புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.