close
Choose your channels

ஒரு கட் இல்லை, ஒரு மியூட் இல்லை.. மிஷ்கின் அடுத்த படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..!

Wednesday, July 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின் தற்போது திரைப்படங்களை இயக்குவதை விட திரைப் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’பிசாசு 2’ திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் சென்சார் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட செய்யவில்லை என்றும் எந்த ஒரு வசனத்தையும் மியூட் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நிர்வாண காட்சிகளில் ஆண்ட்ரியா நடித்ததாக கூறப்பட்டாலும் அந்த காட்சிகள் படத்தில் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் சில ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும் என்று மிஷ்கின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து மிஷ்கின் உள்பட குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment