close
Choose your channels

ராம்-மிஷ்கின் நடித்த 'சவரக்கத்தி' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

Thursday, January 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர்கள் ராம் மற்றும் மிஷ்கின் முதன்முதலாக இணைந்து நடித்த 'சவரக்கத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் தற்போது தணிக்கை செய்து முடிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்., மேலும் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ளதாகவும், சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ராம், மிஷ்கின், பூர்ணா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ளார். மிஷ்கின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மிஷ்கின் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இந்த பாடல் மனிதனை மனிதன் அழிக்க எத்தனையோ கத்திகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மனிதனை அழகு செய்ய வைக்கும் கத்தி சவரக்கத்தி என்ற பொருளுடன் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment