ராம்-மிஷ்கின் நடித்த 'சவரக்கத்தி' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

பிரபல இயக்குனர்கள் ராம் மற்றும் மிஷ்கின் முதன்முதலாக இணைந்து நடித்த 'சவரக்கத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் தற்போது தணிக்கை செய்து முடிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்., மேலும் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ளதாகவும், சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ராம், மிஷ்கின், பூர்ணா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ளார். மிஷ்கின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மிஷ்கின் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இந்த பாடல் மனிதனை மனிதன் அழிக்க எத்தனையோ கத்திகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மனிதனை அழகு செய்ய வைக்கும் கத்தி சவரக்கத்தி என்ற பொருளுடன் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சமந்தா கேரக்டருக்காக வெளியான டீசர்

விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'. படத்தில் சமந்தா, வேம்பு என்ற கேரக்டரில் நடித்து வருவதாக டீசர் வெளியாகியுள்ளது.

மகள் பிறந்த நாளில் தல அஜித் செய்த மகத்தான காரியம்

மகளின் பிறந்த நாளில் நீலாங்கரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தல அஜித், தானே தனது கையால் பிரியாணி செய்து அனுப்பி வைத்துள்ளார்.

ஐஸ்வர்யாராய் எனது அம்மா! 29 வயது இளைஞரின் அதிர்ச்சி அறிவிப்பு

ஆந்திராவை சேர்ந்த 29 வயது சங்கீத்ராய்குமார் என்பவர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து, தான் ஐஸ்வர்யாராயின் மகன் என்றும் தன்னை அவர் செயற்கை கருத்தரித்தல் முறையில்

அரசியல் கட்சி தொடங்க ஆசி பெற்றேன்: கருணாநிதியை சந்தித்த பின் ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் நிலை குறித்த அறிவிப்பை அறிவித்த நிலையில் சற்று முன்னர் திமுக தலைவரும் முதுபெரும் அரசியல் தலைவருமான மு.கருணாநிதியை சந்தித்தார்.

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினியின் அடுத்த முக்கிய அறிவிப்பு

ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவின்போது ரஜினியின் '2.0' படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.