இன்று வெளியாகும் 'பிசாசு 2' பாடலை பாடியவர் சூப்பர் சிங்கர் பிரபலமா?

  • IndiaGlitz, [Thursday,August 25 2022]

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ’பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளையும் தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ஒருவர் பாடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி பிரியங்கா தான் இந்த பாடலை பாடி உள்ளதாகவும் இந்த பாடலை கபிலன் எழுதியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்த கார்த்திக்ராஜா இந்த பாடலை கம்போஸ் செய்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து குறிப்பாக ஜானகி பாடிய ’சின்ன சின்ன வண்ண குயில்’ என்ற பாடலை அவரைப்போலவே பாடி பிரபலமடைந்தவர் பாடகி பிரியங்கா. பல் மருத்துவரான இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடி உள்ள நிலையில் தற்போது ’பிசாசு 2’ படத்திலும் பாடியுள்ளார் என்பதும் அந்த பாடல் இன்று ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.