புன்னகை மன்னன் கமல்-ரேகா பாணியில் தற்கொலை செய்த நிஜ காதல் ஜோடி: மைசூர் அருகே பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், ரேவதி, ரேகா நடித்த ’புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் கமல்-ரேகா காதல் ஜோடி, நாள் முழுவதும் சந்தோஷமாக இருந்து விட்டு அதன் பின்னர் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக ஒரு காட்சி இருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் மைசூர் அருகே நடைபெற்றது நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைசூர் அருகே என்ற யமகும்பா பகுதியைச் சேர்ந்த சச்சின் மற்றும் சிந்து ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் இருவர் வீட்டிலும் இந்த காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது மட்டுமின்றி சிந்துவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தவும் அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் திருமணத்தன்று திடீரென்று சிந்து வீட்டை விட்டு வெளியேறி சச்சினுடன் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி என்ற அணைக்கு சென்றார். அந்த பகுதி முழுவதும் ஜாலியாக சுற்றி பார்த்ததுவிட்டு அதன் பின்னர் மாலையில் இருவரும் நீர்தேக்க பகுதியில் இருந்து ஜோடியாக குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்த செய்தி அறிந்ததும் இருவரது பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்து இருவரின் பிணத்தின் முன் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைக்கும் வகையில் இருந்தது. புன்னகை மன்னன் படத்தில் இடம்பெறுவது போலவே நிஜ காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி சுற்றுலா பயணிகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com