இந்த நடிகையின் வயிற்றில் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்.. மிஷ்கின் உணர்ச்சிகர பேச்சு..!

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

அந்த நடிகையின் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் என்றும் என்னை ஒரு தாய் போல் அவர் பார்த்துக் கொள்வார் என்றும் இயக்குனர் மிஷ்கின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மிஷ்கின் சகோதரர் ஆதித்யா ஏற்கனவே ’சவரக்கத்தி’ என்ற படத்தை இயக்கிய நிலையில் தற்போது ’டெவில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதி அருண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் மிஷ்கின் உணர்ச்சிகரமாக பேசினார். ’இந்த படத்தின் நாயகி பூர்ணா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. என் வாழ்க்கையில் அவர் ஒரு முக்கியமான பெண். அவர் வயிற்றில் அடுத்த ஜென்மத்தில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன். என்னை அவர் ஒரு குழந்தை போல் பார்த்துக் கொள்வார். என் குழந்தை விட அவருடைய குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

எனது விருப்பம் அவர் சாகும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற இயக்குனர்களின் படங்களில் அவர் நடிப்பாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் எப்போதும் மேடையில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவார். அந்த வகையில் ’டெவில்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.