இரண்டு இசை மேதைகளை 'பிசாசு 2' படத்தில் பயன்படுத்தி கொண்ட மிஷ்கின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் தற்போது ‘பிசாசு 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு என்ற படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்தில் இரண்டு இசை மேதைகளை பயன்படுத்தியுள்ளதாக மிஷ்கின் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் டிரெம்பெட் இசைக்கலைஞர் மாக்ஸ்வெல் ராஜன். இவர் இசைஞானி இளையராஜாவிடம் பல வருடங்கள் பணிபுரிந்தவர் என்பதும், ‘மெளனராகம்’ படத்தில் இடம்பெற்ற ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலுக்கு டிரெம்பெட் இசை அமைத்தவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்னொருவர் சாக்ஸ்போன் இசைக்கலைஞர் சாக்ஸ் ராஜா. இவர்கள் இருவருடைய இசை வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள மிஷ்கின், இந்த இரு இசை மேதைகளுடன் ‘பிசாசு 2’ படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
Today, in our re-recording session, I had an opportunity to work with Mr.Maxwell Rajan, who had the honour of playing Trumpet solo for the timeless song "Mandram Vantha Thendralukku" in the movie Mouna Ragam.
— Mysskin (@DirectorMysskin) February 2, 2022
Dear sir, thank you for making our life rich and meaningful.
Mysskin pic.twitter.com/VbiXuRBj4V
Today I was fortunate to work with Mr.Sax Raja.
— Mysskin (@DirectorMysskin) February 2, 2022
He played Oboe and Clarinet. Every time he played he elevated my scenes an inch higher.
After the session I requested him to play a solo, He played the greatest composition from the movie MISSION composed by Master Ennio Morricone.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments