'நீ ஒரு பொறுக்கிடா? விஷாலை கடுமையாக விமர்சனம் செய்த மிஷ்கின்
Send us your feedback to audioarticles@vaarta.com
‘துப்பறிவாளன் 2’ படத்தினால் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதும் பின்னர் அந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதும், அதன்பின்னர் இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், விஷாலை ‘நீ ஒரு பொறுக்கிடா’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் இந்த விழாவில் மேலும் பேசியதாவது:
ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு கதையை எழுதும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதுவார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அவ்வாறு எனது உயிரை கொடுத்து எழுதிய கதைகளில் ஒன்றுதான் துப்பறிவாளன். விஷாலுக்காகத்தான் அந்த கதையை எழுதினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முன் விஷாலின் மூன்று படங்கள் பிளாப்
என் நிஜ சகோதரனை கூட அந்தளவுக்கு பாசத்துடன் பார்த்தது இல்லை. நான் அவனை அப்படி பார்த்து கொண்டேன். அவனுக்காக இரண்டாவதாக ஒரு கதை எழுதினேன். அந்த கதையை கேட்டு என்னை கட்டிப்பிடித்து, நானே தயாரிக்கிறேன் என்று கூறினான். ஆனால் அந்த கதையை பாபி என்ற தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாக கூறினேன். அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு 20 கோடி வரை பட்ஜெட் தேவைப்படும். நீயே கடனில் இருக்கிறாய், உன்னால் முடியாது என்றேன். ஆனால் நான் தான் தயாரிப்பேன் என்று முரண்டு பிடித்தான். அப்போது ஆரம்பித்தது எனக்கு தலைவலி. நான் திரைக்கதை எழுத ரூ.7.5 லட்சம் வாங்கினேன். ஆனால் பத்திரிக்கை செய்தியில் ரூ.35 லட்சம் வாங்கியதாக போட்டார்கள். அதை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதேபோல் இதுவரை ரூ.15 கோடி செலவு செய்ததாக சொல்கிறான். அவ்வளவும் பொய். வெறும் ஐந்து கோடி மட்டுமே செலவாகியுள்ளது.
8 மாதம் நான் எழுதிய கதைய வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி விட்டு அவன் கையில் தூக்கி கொடுத்தேன். இப்போது என்னைப் பற்றி தவறாக பேசுகிறான். கதையை பற்றி உனக்கு எனக்கு தெரியும். நீ ஒரு பொறுக்கி பையன் டா. 9 மணிக்கு தேர்தலில் நாமினேஷன் செய்த பொறுக்கிடா நீ. நீ என்ன பெரிய எம்.ஜி.ஆரா, இல்லை கலைஞரா? இந்த சமூகம் உன்னை பார்த்து கொண்டிருக்கிறது. என்ன செய்தாய் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு. நீ எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். நான் எப்படிப்பட்டவன் என்று உன் குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, சகோதரனிடம் கேட்டுபார், அவர்கள் சொல்வார்கள் என்னைப்பற்றி. நான் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேள், அவர்கள் சொல்வார்கள்.
ரமணா, நந்தா உன்னை நடுரோட்டில் நிற்க வைப்பார்கள் என்றேன், நடந்துவிட்டது. படம் நிற்க காரணமும் அது தான். என் தாயை பற்றி தவறாக பேசினான். இனி அவனை விட மாட்டேன். தமிழ்நாட்டில் நான் ஒருவன், அவனை பத்திரமாக பார்த்து கொண்டேன். இனி அவனிடமிருந்து தமிழ்நாட்டை நான் பத்திரமாக பார்க்க வேண்டும். யார் நீ, எங்கிருந்து வந்தாய், தமிழ்நாட்டில் நீ தான் காப்பாற்ற வந்தாயா, ஏன் இங்கு ஆட்கள் இல்லையா. இது ஒரு தமிழனின் கோபம். தம்பி விஷால் உனக்கு இருக்கு ஆப்பு. இப்போது தான் ஆரம்பமும், இனி நீ தூங்கவே முடியாது. உன் பக்கம் தர்மம் இருந்தால் வா குருஷேத்திற்கு போருக்கு, வா போரிடலாம். நன்றி என்றார்.
மிஷ்கினின் இந்த பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout