சைக்கோ படத்தில் சிசிடிவி ஏன் இல்லை? மிஷ்கின் ஆர்மியின் கிண்டல் பதிவு

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘சைக்கோ’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒருசில நெட்டிசன்கள் இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் இத்தனை கொலை செய்தும், அது எதுவுமே சிசிடிவி காட்சியில் பதிவாகவில்லை, ஏன் ஒரு இடத்தில் கூட சிசிடிவி இல்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த கேள்விக்கு உதயநிதியின் ரசிகர் ஒருவர் கிண்டலுடன் ஒரு பதிவை பதிவு செய்து அதனை உதயநிதிக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இந்த பதிவை உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு இதுதான்:

”சைக்கோ படத்தில் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கப்படுகிறது. அந்த படம் சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்டது என்பதால் சிசிடிவி கேமரா எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில்

முதலில் அவர்களை சிசிடிவி கேமராவை காட்டச் சொல்லுங்கள் அப்புறமாக நாங்க காட்டுவோம்’ இவ்வாறு அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

கேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்  

கேரளாவில் இடது சாரி கட்சி ஆட்சியில் உள்ளது. மத்திய ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள CAA – க்கு எதிராக கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காதலில் விழுந்தாரா ப்ரியா பவானிசங்கர்: பரபரப்பு தகவல்

'மேயாத மான்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'கடைக்குட்டிசிங்கம்' போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கர்

ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்

அஜித், தனுஷ் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி?

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' மற்றும் 'நட்பே துணை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே.

உலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்!

உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோப் பிரயன்ட் என்பவர் நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.