சைக்கோ படத்தில் சிசிடிவி ஏன் இல்லை? மிஷ்கின் ஆர்மியின் கிண்டல் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘சைக்கோ’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருசில நெட்டிசன்கள் இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் இத்தனை கொலை செய்தும், அது எதுவுமே சிசிடிவி காட்சியில் பதிவாகவில்லை, ஏன் ஒரு இடத்தில் கூட சிசிடிவி இல்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த கேள்விக்கு உதயநிதியின் ரசிகர் ஒருவர் கிண்டலுடன் ஒரு பதிவை பதிவு செய்து அதனை உதயநிதிக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இந்த பதிவை உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு இதுதான்:
”சைக்கோ படத்தில் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கப்படுகிறது. அந்த படம் சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்டது என்பதால் சிசிடிவி கேமரா எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில்
முதலில் அவர்களை சிசிடிவி கேமராவை காட்டச் சொல்லுங்கள் அப்புறமாக நாங்க காட்டுவோம்’ இவ்வாறு அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது
Just a whatsapp forward msg #psycho #myskkinarmy #cctv #apollo ???? pic.twitter.com/RRqFOlhg8v
— Udhay (@Udhaystalin) January 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com