நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த பட தகவலை அறிவிக்கும் பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் விஷாலின் ’துப்பரிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார். இதனை அடுத்து விஷாலே இந்த படத்தின் மீதி பகுதியை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. குறிப்பாக சிம்பு நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக மிஷ்கின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் என்ன? ஹீரோ யார்? என்பது குறித்த தகவல்களை இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
நண்பர்களே,
— Mysskin (@DirectorMysskin) September 17, 2020
என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வருகின்ற செப்டம்பர் 20-ம் தேதி 00:00 AM மணிக்கு அறிவிக்கிறேன்.
அன்பு முத்தங்களுடன்,
மிஷ்கின்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout