மிஷ்கின் இயக்கிய 'பிசாசு 2' படத்தின் த்ரில் டீசர்

  • IndiaGlitz, [Friday,April 29 2022]

மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசர் ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசரில் முழுக்க முழுக்க திகில் காட்சிகளை இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிசாசு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்தோஷ் பிரதாப், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவும் கீர்த்தனா மற்றும் சுசில் உமாபதி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.