மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2' படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கி வந்த ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நிலையில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து 7 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘பிசாசு 2’படம் உருவாகி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது அதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து ‘பிசாசு 2’ படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
கார்த்திக் ராஜா இசையில், சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#Pisasu2 Wrapped Up.
— Mysskin (@DirectorMysskin) September 1, 2021
Thanks to the entire team.@andrea_jeremiah @Lv_Sri @shamna_kkasim @Actorsanthosh @kbsriram16 @APVMaran @teamaimpr@PRO_Priya pic.twitter.com/bFTymIifID
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com