இயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்? ஆச்சரிய புகைப்படங்கள்
- IndiaGlitz, [Thursday,May 28 2020]
இன்றைக்கு பிரபல இயக்குனராக இருக்கும் பலரும் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பதும் உதவி இயக்குநர்களாக இருந்தபோது ஒரு சில படங்களில் நடித்து உள்ளனர் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் பிரபல இயக்குனர் மிஷ்கினும் உதவி இயக்குனராக இருந்த போது ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது
விஜய் நடித்த ’யூத்’ என்ற படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார். அதேபோல் இயக்குனர் கதிர் இயக்கிய ’காதல் வைரஸ்’ என்ற திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளிலும், ஜித்தன் ரமேஷ் நடித்த ’ஜித்தன்’ திரைப்படத்திலும் மிஷ்கின் சில முக்கிய காட்சிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் மிஷ்கின் நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விஷால் நடித்த ’துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து சமீபத்தில் விலகிய இயக்குனர் மிஷ்கின் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணியில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்கவிருப்பதாகவும், ஸ்கைப்பிலேயே அருண்விஜய்யிடம் கதையை சொல்லி முடிவு செய்துவிட்டதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது