close
Choose your channels

மைனா நந்தினி முன்னிலையில் அவரது கணவரை நடுரோட்டில் அடித்த மர்ம கும்பல்.. என்ன நடந்தது?

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையின் சாலை ஒன்றில் மைனா நந்தினியின் முன்னிலையில் அவரது கணவரை ஒரு மர்மகும்பல் அடித்த வீடியோ இணையத்தில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினி என்பதும் ’சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் பல தொடர்களில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்தது. மேலும் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ உட்பட சில திரைப்படங்களிலும் மைனா நடித்துள்ளார் என்பதும் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மைனா நந்தினி தனது கணவர் யோகேஷ்வரனுடன் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென பைக்கில் வந்த இருவர் மைனா கணவர் யோகேஷ்வரனுடன் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைனா நந்தினியின் கார் தங்கள் பைக்கில் இடிக்க வந்ததாக கூறிய அவர்கள் ஆவேசத்துடன் சண்டை போட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பொதுமக்களில் சிலர் அவர்களை சமாதானப்படுத்திய நிலையில், யோகேஸ்வரன் தனது காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது அந்த கும்பலில் ஒருவர் மைனா அருகே வந்து ’ஹாப்பி பர்த்டே’ என்ற ஒரு பூவை கொடுத்தார். இது முழுக்க முழுக்க பிராங்க் என்றும் உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தது என்று கூறிய நிலையில் கொஞ்சம் கோபம் கலந்த மகிழ்ச்சியுடன் மைனா, ‘ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க’ என்று கூறிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment