ஷிவினுக்கு ரோஸ் கொடுக்கும் யோகி.. மைனாவின் ரியாக்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் நிலையில் முதல் கட்டமாக மைனா நந்தினியின் கணவர் யோகி மற்றும் குழந்தை வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் யோகி பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மைனா அவரை அழைத்துக்கொண்டு ஷிவின் உன்னை லவ்ஸ் பண்ணுறா என்று கூற உடனே ’நான் ஷிவினுக்காக ஒன்று சொல்லவேண்டும் என்று மறைத்து வைத்திருந்தார் ரோஜாப்பூவை எடுத்து ஷிவினிடம் கொடுத்து அதன் பிறகு கட்டி அணைத்துக் கொள்கிறார்.
இதனை மைனா ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது சக போட்டியாளர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டனர். அப்போது ’ஷிவின் நன்றாக விளையாடுகிறார் என்றும் அவர் மீது எனக்கு எப்போதும் அன்பு உண்டு' என்று யோகி கூற இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதனை அடுத்து மைனாவிடம் தனியாக பேசும் யோகி, ‘இந்த பிக்பாஸ் விளையாட்டுக்கு நீ லாயிக்கிலை என்றும் உனக்கு விளையாடவே தெரியவில்லை என்றும் கூறுகிறார். ஒரு தப்பு நடக்கும் போது அதை தட்டி கேட்க வேண்டும். அதைத்தான் பார்வையாளர்கள் விரும்புவார்கள். ஆனால் நீ எதையும் தட்டிக் கேட்கவில்லை’ என மைனாவின் தவறை சுட்டிக் காட்டுகிறார்.
Myna's husband Yogi brought a rose for Shivin.#BiggBossTamil6 pic.twitter.com/rOp3Y3ywna
— Bigg Boss Tamil 24*7 Videos. (@BBVideos7) December 27, 2022
#Day79 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ptSZcB3yIU
— Vijay Television (@vijaytelevision) December 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments