பதவியே போனாலும் பரவாயில்லை. முதல்வருக்கு ஆதரவு இல்லை. ஒரு எம்.எல்.ஏவின் கம்பீர முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவியேற்று கொண்டாலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர்தான் அவர் பதவி நிலைக்குமா? என்பது தெரியவரும். இந்நிலையில் சசிகலா அதிமுக அணியில் 124 அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும் எத்தனை பேர் நாளை முதல்வருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதும், எதிராக வாக்களிப்பார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடுநிலை வகிப்பதாக கூறிய மைலாப்பூர் எம்.எல்.ஏ ஆர்.நட்ராஜ், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகவும், இதனால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி எம்எல்ஏ பதவி போனாலும் கவலையில்லை என்றும் கம்பீரமாக கூறியுள்ளார்.
மக்கள் விரும்பும் ஒருவர்தான் முதல்வர் பதவியில் இருக்க வேண்டும் என்றும் அந்த வகையில் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைக்கு நட்ராஜ் தான் சரியான முதல்வர் தேர்வாக இருப்பார் என்றும் ஏற்கனவே முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments