லாட்ஜில் எடுத்த ரகசிய வீடியோ: மயிலாப்பூர் இளம்பெண்ணின் பகீர் புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னை உயிருக்கு உயிராக காதலித்த காதலருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி ஜாலியாக இருந்ததாகவும், அப்போது எடுத்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து காதலன் தன்னை மிரட்டுவதாகவும் மயிலாப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாப்பூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் சமீபத்தில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் தேனாம்பேட்டை சேர்ந்த 29 வயது நபர் ஒருவரை தான் கடந்த சில மாதங்களாக காதலித்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் தனது காதலருடன் பல இடங்களில் தான் சுற்றியதாகவும், ஒரு சில நாட்கள் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி காலியாக இருந்ததாகவும், கூறியுள்ளார்.
இதனையடுத்து தற்போது அவர் தன்னிடம் பேசுவதை தவிர்த்ததாகவும் திருமணம் செய்யவும் மறுப்பதாகவும் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கூறியபோது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், எனவே இதோடு நம்முடைய உறவை முறித்துக் கொள்ளலாம் என்றும் மீறி தன்னை தொந்தரவு செய்தால் லாட்ஜில் தான் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வேன் என காதலன் மிரட்டியதாகவும் அந்த இளம்பெண் புகார் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி ஒருசில வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்து விட்டதாகவும் அவர் அழுது கொண்டே கூறியுள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணின் காதலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments